இந்தக்கவிதையை எழுதி முடித்தபோது இருந்த குதூகலம், என் ப்ரிய கவிஞரும் எழுத்தாளருமான திரு சுந்தர்ஜி அவர்களோடு நின்று (பதற்றத்தில் நான் ரொம்ப இறுக்கமாகவே நிற்கிறேன்) போட்டோ எடுத்துக்கொண்டமாதிரி, ஆனந்த விகடனில் பக்கத்தில் பக்கத்தில் எங்கள் கவிதைகளை பார்த்தபோதும் இருந்தது.
சுந்தர்ஜி அவர்களின் கவிதைகளை வாசிக்க சொடுக்குங்கள்: http://sundarjiprakash.blogspot.in
நன்றி ஆனந்த விகடன்! (11.04.2012)
ஓவியம்: ஹரன்
ஓவியம்: ஹரன்
பாதங்களில்
சக்கரங்கள் பூட்டிய பாவனைகளில்
பிள்ளைகளே
பெட்டிகளும் பயணிகளுமானதில்
உருள்கிறதொரு தொடர்வண்டி
ஓட்டுநனின் மனம் போன
பாதைகளைத்
தண்டவாளமெனப்பற்றி
அனாயாசமாய் கடக்கிறது அது
மெட்ராஸ்
டெல்லி
மும்பை
கொல்கத்தா நிலையங்களை
எந்தவூரில்
அதிகம் பனிப்பொழிவு
இருந்ததெனத்தெரியவில்லை
"அவசரமா ஒண்ணுக்கு போகணும்" என்று
வெளியேறுகிறான் ஒரு பிள்ளை
அல்லது
ஒரு பயணி
அல்லது
கழன்றுகொள்கிறது ஒரு பெட்டி.
This comment has been removed by the author.
ReplyDeleteஎன்ன தியாகு பதட்டம்? என் தோள் மேல உங்க கை இருந்த போது அப்படித் தெரியலியே?
ReplyDeleteஅற்புதமான கவிதை.விகடனுக்கும் பெருமை இந்தக் கவிதையால்.
//எந்தவூரில்
ReplyDeleteஅதிகம் பனிப்பொழிவு
இருந்ததெனத்தெரியவில்லை
"அவசரமா ஒண்ணுக்கு போகணும்" என்று
வெளியேறுகிறான் ஒரு பிள்ளை
அல்லது
ஒரு பயணி
அல்லது
கழன்றுகொள்கிறது ஒரு பெட்டி.//
கோடைகாலத்தில் ஒரு பவர்கட் இல்லா இரவாய் இருக்கிற்து இந்த "ஒண்ணு".
ஆவியில் படித்தேன். இப்போ நீங்களும் பதிவர் என்றதும் ஒரு பழக்கம் தோன்றியது.
நம்ம சுந்தர்ஜியை ரசிக்கிறவர் என்றதும் நெருக்கம் வந்துவிட்டது.வாழ்த்துக்கள்.