21.5.12

குமிழ்கள் அல்ல கிரகங்கள்:


 சூரியனிலிருந்து
8 ஒளி நிமிடத் தொலைவில்
பூமியில் சுற்றித் திரிகின்றன
சிறுவன்
சோப்பு நீரில் தோய்த்த
குழல் வழி சிருஷ்டிக்கும்
எண்ணிலடங்கா கிரகங்கள்

சொற்ப நிமிஷங்களே சஞ்சரித்து
பின்
உடைந்து சிதறும் அவற்றில்
வாழ்ந்து பார்ப்பதெனில்
முற்றாக உங்களை 
துண்டித்துக் கொள்வது உசிதம்,
வாழ்வது பற்றிய கற்பிதங்களிலிருந்து
வாழ்வாதாரங்கள் பற்றிய
குறுக்கு விசாரணைகளிலிருந்து.

- நன்றி: கல்கி (27.05.2012)

1 comment:

  1. கவிதை படித்து முடிக்கும்நேரத்துள் வாழ்ந்து முடித்திருந்தேன் சோப்புக்குமிழி ஒன்றினுள். லயிப்புடன் வாழ்ந்த நொடிகள் அவை. வாழ்வித்தமைக்கு நன்றி.

    ReplyDelete