17.2.13

நான்கு கவிதைகள்


1)
ஒரு நேரம்
கூரை விழுந்திடும் போல
ஒரு நேரம்
சுவர் சரிந்திடும் போல
பதறி அலைந்து
தாங்கித் தாங்கி பிடிக்கிறது
சிலந்தி

இதன் கூட்டையா
அழித்தேன்!


2)
ஆழத்தில்
கிணற்று நீரில்
தத்தளித்துக் கிடந்த
நிலாவை
அப்புறம்
அண்ணாந்து
ஆகாயத்தைப் பார்ப்பது மூலம்
காப்பாற்றும்படியானது.

- (மறைந்த கவிஞர் திரு.C.மணிக்கு)


3)
பட்ட மரம் நேற்றுவரை,
மனமில்லை
புதிய வர்ணத்தில்
கிளையோடு செழித்ததாகும்
பட்டத்தை பிரித்தெடுக்க.


4)
தரையிலடித்த
ரப்பர் பந்து போலும் தவளை,
துள்ளல்
துள்ளல்
துள்ளல்..

No comments:

Post a Comment