8.4.13

இதற்குள்



குரைத்துக்கொண்டே இருந்தானல்லவா
வீட்டை விட்டு
வெகு தூரம் உன்னை
கொண்டு விடும் வரையிலும்
அவன்தான் நாய்.

பசி உன்னை வதைக்குமே குட்டி
குளிர் உன்னை எரிக்குமே

கழிவிறக்கம் துரத்தும்
உலகின் வாசலை
இமை மூடித்தாளிட்டது
எப்போதெனத்தெரியவில்லை

ஹே குட்டி...
கண்கள் திறந்தாயிற்றா
இதற்குள்தான்
எத்தனை துறுதுறுவென்றாகிவிட்டாய்
மேலும்
ஆச்சர்யம்தான்
என் கனவுக்குள் நுழையும்
சுரங்கப்பாதையும்
உனக்கு தெரிந்திருக்கிறது.


2 comments:

  1. குழந்தைகளுக்குதான் எத்தனை வல்லமை! நேரிலே சாதிக்க முடியாத காரியத்தையும் கனவுவழி சாதித்துவிடுகிறார்களே... விட்டுவந்த நாய்க்குட்டியைத் தேடி இன்று செல்வீர்கள்தானே...

    ReplyDelete
  2. தாயைப் பிரிந்த குட்டி நாய், ரோமம் உதிர நோய்ப்பட்ட தெரு நாய், பேக்கரியின் வாசலை மிதிக்கும்போதே முன்னெப்போதோ வாங்கியளித்த ரொட்டித்துண்டுக்கு இன்றும் அணுகி வாலாட்டும் நாய், எஜமான் விசுவாசத்தில் புதியவர்களை வாசலுக்கு வெளி்யேயே வைக்கும் நாய் என்று, நாய்கள் என்றைக்கும் என் மனதுக்கும் நேசிப்பிற்கும் நெருக்கமாகவிருக்கின்றன. இந்த நேரத்தில் என் பிரிய சுந்தர்ஜி-யின் (http://sundargprakash.blogspot.in) குரைப்பின் மொழி கவிதையை நினைத்துக்கொள்கிறேன். நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete