30.10.13

தகிக்கும் தார்ச்சாலையில்



தகிக்கும் தார்ச்சாலையின்
தூரக்காட்சியில்
நெளிந்து நெளிந்து
மினுங்கும் நீர்

நெருங்கி நெருங்கி
ஜலீரென இசைத்துத்தெறிக்க
கடப்பேன் என் மோட்டார் சைக்கிளில்
என்றெண்ணினேனே

இவ்விடம் அடைந்திருக்கையில்
நீர் மறைந்து போகவே
நடந்தேறியது யாது

ஓஹ்..!
அருகாமை குடித்துவிட்டிருக்கிறது.


1 comment: