2.11.14

மது - கவிதைகள்




i)

மூடியை
எதிர்க் கடிகாரச்சுற்றில்
திருகுவதுதான்
புட்டியை திறப்பது

முடிவில்
புட்டியிடம் பிதற்றிக்கொண்டிருந்தேன்

தலை சுற்றுகிறது
நீதான் என்னை
திறந்துகொண்டிருப்பதா

ii)

கடைவாய்ப் பற்களின்
துணைகொண்டு பிளக்கிறேன்
இறுக மூடிய
தகடும் சீஸாவுமான
உதடுகளை

நீங்கள் செவி மடுக்க
மௌனம் கலைத்து
இந்த
புட்டி நிறை பியர்
பேசவும்
எத்தனை இருந்திருக்கிறது

குறிப்பாக
என் குரலில்

14.10.14

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கியப் போட்டி 2014



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கியப் போட்டி 2014-க்கான பரிசளிப்பு விழா கடந்த 12.10.2014, ஞாயிறு அன்று திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

எனது ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ கவிதை நூலுக்கான பரிசை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: