17.9.11

ஆர்டிஸ்ட்



உன் கைவிரல்கள் செய்யும்
சாட்டையின் சாகசங்களை,
நில்லாமல் சுழலும்
நிறம் குடித்த தூரிகைப்பம்பரம்.

எழுத்து,
பலகையிலுன் கைவண்ணமென்றால்
கூடுதலாய்ப்பூரிக்கும்

விளம்பரம்,
உன் ரசனையைப்பூசி
செய்துகொள்ளும் ஒப்பனையில்
அப்படி ஜொலிக்கும்

காட்சி மாறுகிறது ப்ரிய நண்பா..

ப்ரஷ், பெய்ண்ட், ஃபாண்ட், ப்ரிண்ட்
எல்லாவற்றையும்
இந்த எலெக்ட்ரானிக் பைசாசம்
பார்த்துக்கொள்ளும்

காலி குப்பிகளையும்
வரண்ட எழுது மயிர்க்குச்சிகளையும்
சுமந்துகொண்டு
சும்மா
நீ ஆர்டிஸ்ட் என்று
பிதற்றித்திரி பித்துப்பிடித்து
போதும்.

(முத்து-க்கு)
08.11


1 comment:

  1. ப்ரஷ், பெய்ண்ட், ஃபாண்ட், ப்ரிண்ட்
    எல்லாவற்றையும்
    இந்த எலெக்ட்ரானிக் பைசாசம்
    பார்த்துக்கொள்ளும்

    இயந்திரமயமாக்கலில் தொலைந்து போனது தூரிகையின் ஜாலங்கள்.
    ஒரு பெருமூச்சும்.. காட்சி மாறுதலில் அடித்துச் செல்லப்படும் நாமும்.

    ReplyDelete