எரியும் ஒரு மெழுகுவர்த்தியை
பற்றிக்கொண்டு
என்னென்ன செய்ய
இருளை அகற்ற
சுடர் பார்த்து தியானித்திருக்க
பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
ஊதியணைக்க
கர்த்தரை பிரார்த்திக்கையில்
ஒளிசெய்யவிட
உருகவுருக அதையொரு
கவிதையில் வைப்பதைத்தவிர
உயரத்தில்
மேல்நோக்கியேயெரியும்
மெழுகுவர்த்தியை
கிடைமட்டமாய்க்கிடத்திய
கண்ணாடித்துண்டொன்றின் பரப்பில்
நடுகிறேன்
அதே தளிர் நெருப்பை
ஆழத்தில்
கீழ் நோக்கி எரியவிடுவதன்
சாகசமாக.
எரியும் மெழுகுவர்த்தியைக் கவிதையில் வைத்துவிட்டீர்கள் தியாகு.மொழியும் சுடர்கிறது வான் நோக்கி.மெழுகின் சுடரையொத்த அழகான கவிதை.
ReplyDeleteநல்ல சாகசம்! முயன்றால் முடியாதது என்ன உண்டு? கவிதையில் உருகும் மெழுகு இப்போது மேலும் கீழுமாய் இரண்டு பக்கத்தோடு, வாசகன் வியப்பிலும். அட, ஆமாம்! உருகுவதோடு உருக்குகிறது மனத்தை. பாராட்டுகள்.
ReplyDeleteஒன்றை விட்டுவிட்டீர்கள் தியாகு உற்றுப்பார்த்து உங்களைப்போல ஒரு கவிதை நெய்ய .... அழகான கவிதை
ReplyDelete