7.9.12

என் வரவேற்பறையில் இருபது லிட்டர் கொள்ளளவில் ஒரு கடல்.



கொஞ்சம் மணல்
கொஞ்சம் கூழாங்கற்கள்
கொஞ்சம் கிளிஞ்சல்கள்
சிறு சிறு மீன்கள் என
எல்லாவற்றையும்
உள்ளடக்கியதாய்த்திகழ்கிறது
என் வரவேற்பறையில்
இருபது லிட்டர் கொள்ளளவில்
ஒரு கடல்.

அடுக்கு மாடி குடியிருப்பில்
என் வீடு
முதல் தளத்திலென்பதால்
கடல் மட்டத்திலிருந்து
பூமியின் உயரம்
சுமார் -5.88 மீட்டர்.

4 comments:

  1. வ‌ர‌வேற்ப‌றையில் க‌ட‌ல், போன்சாய் ஆல‌ம‌ர‌ம், சுவ‌ரொட்டியில் இம‌ய‌ம‌லை, கொட்டும் அருவி, விரிந்த‌ உல‌கின் சுருக்க‌மாய் வீடு! உட்கார்ந்த‌ப‌டி க‌ணினி முன் ம‌னித‌ன்!

    ReplyDelete
  2. நீரின் உப்பின்மை பற்றிய குழப்பத்தோடும், உப்பிடுபவனை நினைத்தபடியும், கொள்ளளவு பற்றிய கவலையின்றியும் நீந்தியபடி இருக்கின்றன தியாகுவின் மீன்கள்.

    சுமார் 5.88 மீட்டர் உயர முதல் மாடிக்கு மீனின் கடலைப் பெயர்த்து வந்தவன் யாராயிருக்கும் என்ற கவலையுடன் உடன் மீன்களின் வெகு சமீபத்தில் நீந்திக்கொண்டிருக்கிறது தியாகுவின் கவிதை.

    ReplyDelete
  3. போதையூட்டும் கவிதை.

    ReplyDelete
  4. 20 லிட்டர் கொள்ளளவில் நீந்தக் கூடிய கடலைக் கவிதைக்குள் அடக்கி விட்டீர்கள்

    ReplyDelete