12.10.12

எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை


1)
குப்பை மேட்டிலிருந்து
கொஞ்சம் உயரத்தில்
சிறகடித்து
பறக்கவும் செய்த
செத்த எலிக்கு
நான்கு கண்கள்
ஆறு கால்கள்

2)

பழைய அலமாரியில்
தஞ்சமென்றான
பிதுக்கிய பற்பசை
நீளமேயிருக்கும்
எலிக்குஞ்சுகளோடு எனக்கு
குரோதமில்லை

இருளில்

பதுங்கிப் பதுங்கி
சுடவே
வளைய வரும்
கங்குகளிரண்டை அணைக்கிறேன்
ச்சூ...!

3 comments:

  1. தாங்க‌விய‌லாதொரு தொல்லையை அழ‌காக்கி விட்ட‌து உங்க‌ள் க‌விதை வ‌ரிக‌ள்... எதுகுறித்தும் ந‌ம‌து பார்வையின் வீச்சிலிருக்கிற‌து எல்லாம்.

    ReplyDelete
  2. எலிகளைக் கூட நேசிக்க வைத்து விடுகிறது

    ReplyDelete
  3. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையுந் தாண்டிப் புனிதமானது.

    எலிகளை நேசிக்க மனிதர்கள் இன்னும் கற்கவில்லை. த.க.வின் ’நன்றாயிருக்கிறது உங்கள் விருந்தாளிகளை நீங்கள் வரவேற்கும் லக்ஷணம்’ நினைவுக்கு வருகிறது.

    பாராட்டுக்கள் த்யாகு.

    ReplyDelete