14.12.12

மரமல்லி


1)
மரமல்லி மரம்
நிழல் என்னவோ
வெள்ளை நிறம்!

2)
வாசலில்
மரமல்லிக் கோலம்
இதுதான்
என்
வீட்டை அறியவான
அடையாளம்.

3)
உதிர்ந்திருந்த
மரமல்லிகளில் இரண்டெடுத்து
கையிலேந்தும் கணம்
நானும்
மரமல்லி மரம்.

4)
ஆழமாக சுவாஸிக்கிறேன்
மறுபடி மறுபடி,
விடாமல் பிடித்துவைப்பதெப்படி
மரமல்லியின் வாசத்தை.

3 comments:

  1. ஆழமாக சுவாஸிக்க வைத்த மரமல்லிக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_23.html
    நன்றி!

    ReplyDelete
  3. மறுபடி மறுபடி சுவாசிக்கச் செய்து நம்மை உயிர்த்திருக்கச் செய்யும் அற்புதம்!

    நானும் மரமல்லியான தருணம் உலகம் அக்கணத்தில் உறைந்து விடக்கூடாதா என்று இருந்ததே...

    வாசலில் மரமல்லிக் கோலம்... ஆஹா...!

    நிழல் என்னவோ வெள்ளை! விந்தை சூழ வியப்பு !!

    ReplyDelete