27.3.13

இன்னும் பருகவேயில்லை



காகிதக் குவளையோடு
சர்க்கரை கலந்த பால்

இணைப்பாக
பரிசாரகன் இட்டுத்தருவது
நூலின் நுனியில்
சிறு தேயிலைப்பொட்டலம்

விளையாட்டுபோலக் கூட
மூழ்கடித்து மூழ்கடித்து
கரைக்கிறேன்

இன்னும் பருகவேயில்லை
எனக்கென்னவோ
இப்போதே என்
சோம்பல்
வடிந்து வருவதாகத்தானிருக்கிறது.


3 comments:

  1. இந்த விளையாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும் ...

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சுடச் சுட ஒரு தேநீர்க்கவிதை! அட, வாசிக்கும்போதே என் சோம்பலும் வடியத்துவங்கிவிட்டதே... அருமை.

    ReplyDelete
  3. நண்பர்களுக்கு அன்பு நன்றிகள். :)

    ReplyDelete