22.5.13

ஆறு கவிதைகள்




சப்பாத்துக்களைப் போல
நீ கழற்றி விட்டுப்போன
என்
காதலின் கண்களினூடே
வழிந்திறங்கி
அவிழ்ந்த நாடாவை வரையும்
கண்ணீர்.



  

உன் ஒரு பாடல்
லட்சம், கோடி செவிகளுக்கானது
கோடி கண்களில்
கோடி நிலாக்களாகத் தென்படும்
அந்த ஒரேயொரு நிலா போல.





உன் கரம் பற்றியே
நடக்கிறேன்,
என் முன்
மரணம் வந்து
கைகுலுக்குவதற்கில்லை
இப்போதைக்கு.





துளிகள் துவங்கும் நேரம்
மொட்டவிழ விரியும்
ஓரிதழ் குடைப்பூவும்







தொப்பலாய் நனைந்திருக்கும்
அலைபேசி கோபுரம் கடத்தி
காது மடலோரம்
நடுங்கிப் பிதற்றும்
என் குரல்,
கூடும் உன்
மூச்சுக்காற்றின் உஷ்ணத்தில்
குளிர் காய்கிறது.







மழை வரும் போல
வெளியே எட்டிப்பார்த்துச்
சொல்கிறாள் அம்மா,
பட்டனை உசுப்பி
விரித்த தோகையோடே
தெருவில் இறங்குகிறது
மயில்.


1 comment:

  1. அனைத்தும் அருமை... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    படங்கள் பிரமாதம்...

    ReplyDelete