காற்றில் சுழல்வது
என நினைத்தேன்
நாவாகிப் புரளும்
அந்த இலை
இறுதியாய்
என்னவோ சொல்ல வருகிறது.
மோதிக் கலையவேண்டும்
மௌனம்
இக்கணம்
எங்கிருந்தபோதும்
எதிரில் வா!
உன் வெளிநடப்புக்குப் பின்னான
வெறுமையின் சுவடுகள்
கரை மணலில்
பித்துப்பிடித்தாற்போல்
விரைந்து வந்து
அழித்தபின்புதான்
கிட்டுகிறது ஆறுதல்
இந்த அலைக்கு.
No comments:
Post a Comment