கால்கள் மட்டும் தெரிய
கதவு மூடிய
ஐந்தாம் கேபினுக்குள்
தன் கண் ஒன்றை
விட்டுவைத்திருக்கிறான்
அவனுடையதான மேஜையில்
கணினியில் லயித்திருக்குமிந்த
கஃபே சிப்பந்தி
ஜோடிக்கப்பட்ட சான்று
இலக்கங்கள் பிறழ்ந்த
கைப்பேசி எண் சகிதம்
தன்னையும் அவளையும்
சற்று முன் பதிவு செய்தவனின்
உதடுகளிரண்டு
தடித்த புழுக்களென
ஜிப் தளர்த்தின
மேலாடை கடந்து
அவளின் மார் மீது
ஊர்கின்றன
கைகள் தழுவ
கண்கள் செருக
அவள் தன்
முக பாவங்களைக் கொண்டு
முறுக்கிப்பிடிக்கும்
த்ராட்டிலுக்குப் பணிந்து
முட்களிரண்டு
எழுபதைத் தொட்டிருக்கின்றன
இப்போதைக்கு.
No comments:
Post a Comment