2.11.14

கோடி மீன்கள்




உதறினாற்போல் விரிக்கப்பட்ட
துகில் அங்காடியின்
வெளிர் நீல நிற சீலை
உயர எழுந்தடங்கி
உறைந்த கடலானது

இங்கு
கரையோரம் அமர்ந்தபடி
அலைகளை தன்
விரல்களால் வருடும் -
இவனில் பாதியானவள்
காணாது

நெகிழ்ந்து சலம்புகின்றன
நதியொன்றின் கோடி மீன்கள்
எதிரில்
தோன்றி நிற்கும்
கடற்கன்னியுள்
நீந்திட

1 comment:

  1. நெகிழ்ந்து சலம்புகின்றன
    நதியொன்றின் கோடி மீன்கள் //

    சபாஷ் ! கடற்கன்னியை கவிதைக்குள் அடக்கியாச்சு

    ReplyDelete