4.11.14

சக்கரம் வரைந்த சாலை ஓவியம்



க்கரம்
வரைந்து நகர்ந்த
சாலை ஓவியத்தில் சேராமல்
பிரிந்து வருகிறது
வர்ணம் சிவப்பு

பிறர் இடுவது அல்லாது
ஐநூறு
நூறென
தானே விசிறிவிட்டிருக்கும்
தாள்களை உற்றுப் பார்ப்பவர்கள்
தவற விடும் தத்ரூபம்

முற்றுப் பெறாததெனத் தோன்றும்
இன்னும்
ஈரம் காயாத இதுதான்
முழுமையிலிருந்து
சிதைவைச்சொல்லும்
சித்திரங்களின் சித்திரம்

சுற்றுக்கோட்டின்
ஒழுங்கற்ற சுழியத்தை
சுவடென விட்டு
ஸ்ட்ரெச்சர் சட்டமேறிவிட்ட
கலைப்படைப்பு இதை
வாங்குதற்கும்
யார் வருவாரோ.

No comments:

Post a Comment