3.7.13

மாயச்சுவர்





அலமாரிக்கதவில்
பதிந்திருக்கும் கண்ணாடிக்குள்ளிருந்து
கைகள்  நீட்டி அழைத்துவைக்கிறாள்
நேற்றுதான் நிஷித்
பெயர் சூட்டியாகிவிட்ட
கண்ணாடி அம்மா

நெருங்கவிடாமல்
இடைநின்றுத் தடுக்கும்
மாயச்சுவர் எதுவென
குழம்பியபடி
கண்ணாடிக்குள் நிற்பவனை
இங்கிருந்து
அழைத்துக் கொண்டேயிருக்கிறாள்
நமட்டுச் சிரிப்போடே
நிஷித் அம்மா.


1 comment: