புட்டி மதுவை
தம்ளருக்கு மாற்றிவிட்டவன்
தண்ணீர் பாக்கெட்டை
பெற்றுக்கொள்கிறான் என்னிடமிருந்து
கொடுக்கும்போது அவனிடம்
சொன்னேன்
'பால் மடியை ஸ்பரிசிக்கிற உணர்வு'
நுனி நெகிழியைக் கடித்து
மடியை
காம்பாக்கிக் கறக்கிறான்,
என் கண்ணில்
காம்பும் உறுப்பாகி
தம்ளருக்குள் பீய்ச்சுகிறது
சிறுநீர்
இதை அவனிடம் சொல்லவில்லை.
No comments:
Post a Comment