1)
மந்தையை விட்டு உன்னை
வெகுதூரம்
விலக்கி வைப்பதுதான் இது
இந்த மேய்ப்பனை மன்னியும்
என் சிறிய ஆட்டுக்குட்டியே
2)
திமிறத் திமிற கைமாற்றுகிறேன்
பட்டாம்பூச்சி உன்னை
வண்ணங்கள்
என் விரல்களில் பாதி
அவர்களின் விரல்களில் மீதி
3)
வரவேற்பறை
படுக்கையறை
சிலபோது சமையலறை
அறையறையாய்
இவனையேற்றிக்கொண்டு உருண்டதுபோலொரு
ரயில்தான்
பள்ளியறை தாண்டி
வராந்தாவை அணுக்கக்கூடாமல்
விக்கித்து நிற்பது
4)
கிளி பொம்மை இருந்ததை
நினைவுகூர்கிறாய்
பெயருக்குக்கூட
பொம்மை வானமொன்று
இருந்திருக்காது
சரிதானே பையா
5)
வழமை போலவே
இன்றும் கனக்கிறது
நிஷித்-ன்
கண்ணீரை உண்ட லஞ்ச் பாக்ஸ்
கண்ணீரைத்தின்ற ஸ்நாக்ஸ் பாக்ஸ்
( நன்றி: http://www.nanthalaalaa.com/2012/08/11.html )
படிப்பின் நிமித்தம் தானே... ஆற்றியிருங்கள் தியாகு.
ReplyDeleteதந்தையர்கள் என்னதான் தினம் தினம் பிள்ளையைப் பிரிந்து அலுவலகம் சென்றாலும்... :(
வேறொரு மந்தையில் அவனும் பழகட்டும்.
இனி அவர்கள் தான் அவனது வானவில் ஓவியத்தின் வண்ணங்களை நிர்மாணிக்கப் போகிறவர்கள்.
சவாரியில் தூரங்களைக்
கடந்தவன் தன் கால்களில் நடந்து பழகட்டுமே.
உங்களின் கிளிப்பிள்ளை தனக்கென தனி மொழி கற்கப் போகிறான்.
ஆனால், அவனும் உங்கள் பிரிவின் கனம்
தாங்கிப் பழக கண்ணீரில் கரை(க்)கிறான்
போலிருக்கே...
இருவருக்குமான சோதனை இது.