7.9.12

என் வரவேற்பறையில் இருபது லிட்டர் கொள்ளளவில் ஒரு கடல்.கொஞ்சம் மணல்
கொஞ்சம் கூழாங்கற்கள்
கொஞ்சம் கிளிஞ்சல்கள்
சிறு சிறு மீன்கள் என
எல்லாவற்றையும்
உள்ளடக்கியதாய்த்திகழ்கிறது
என் வரவேற்பறையில்
இருபது லிட்டர் கொள்ளளவில்
ஒரு கடல்.

அடுக்கு மாடி குடியிருப்பில்
என் வீடு
முதல் தளத்திலென்பதால்
கடல் மட்டத்திலிருந்து
பூமியின் உயரம்
சுமார் -5.88 மீட்டர்.

3.9.12

எங்கனம்?ஜூம் இன் செய்கிறது
ஜூம் அவுட் செய்கிறது
வேகமாய் ஜூம் இன் செய்கிறது
இப்போதும்
திரை தாண்டினபாடில்லை பூ

வெறுமே
மவுஸை திருகிக்கொண்டு
கணினியையே வெறிக்கும்
தேனீயின் சிந்தனையில்
தேன் பருகல் எங்கனம்?