14.10.14

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கியப் போட்டி 2014தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கியப் போட்டி 2014-க்கான பரிசளிப்பு விழா கடந்த 12.10.2014, ஞாயிறு அன்று திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

எனது எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லைகவிதை நூலுக்கான பரிசை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
8.10.14

முக பாவங்களின் த்ராட்டில்
கால்கள் மட்டும் தெரிய
கதவு மூடிய
ஐந்தாம் கேபினுக்குள்
தன் கண் ஒன்றை
விட்டுவைத்திருக்கிறான்
அவனுடையதான மேஜையில்
கணினியில் லயித்திருக்குமிந்த
கஃபே சிப்பந்தி

ஜோடிக்கப்பட்ட சான்று
இலக்கங்கள் பிறழ்ந்த
கைப்பேசி எண் சகிதம்
தன்னையும் அவளையும்
சற்று முன் பதிவு செய்தவனின்
உதடுகளிரண்டு
தடித்த புழுக்களென
ஜிப் தளர்த்தின
மேலாடை கடந்து
அவளின் மார் மீது
ஊர்கின்றன

கைகள் தழுவ
கண்கள் செருக
அவள் தன்
முக பாவங்களைக் கொண்டு
முறுக்கிப்பிடிக்கும்
த்ராட்டிலுக்குப் பணிந்து
முட்களிரண்டு
எழுபதைத் தொட்டிருக்கின்றன
இப்போதைக்கு. 
 
 

1.10.14

இலக்கியப் போட்டி 2014மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல் பரிசு பெறும் நூல்கள் வரிசையில், எனது ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ - வெயில்நதி வெளியீடு - கவிதை நூலும் இடம்பெறுகிறது என்பதை மிக்க மகிழ்வுடனே பகிர்கிறேன் நண்பர்களே..

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் தேர்வுக்குழுவுக்கு அன்பு நன்றிகள்.