16.7.13

போஸ்ட் ஆபீஸ்'இங்கே போஸ்ட் ஆபிஸ் எங்கேயிருக்கு'
என்று கேட்டு முன்நிற்பவனை
எதிர்கொள்வதாக
முதலில் அவனை
மூன்றாக மடித்தேன்
நேர் இடது வலது
என்று வழி சொல்வதினூடே
எளிதில் திறந்துகொள்ளாத
உறையின்
வாய்ப்பக்கம் ஊதி விரித்து
அவனை உள்ளிட்டேன்
நன்றி பகன்றவன் மீது
முடிவாய்
ஒட்டி அனுப்புகிறேன் ஒரு
புன்னகை தலையை

பாருங்கள்
இங்கேயே இருந்திருக்கிறது
போஸ்ட் ஆபீஸ்.

2 comments:

 1. நன்றி பகன்றவன் மீது
  முடிவாய்
  ஒட்டி அனுப்புகிறேன் ஒரு
  புன்னகை தலையை//

  நல்லாயிருக்குங்க உங்க போஸ்ட் ஆபீஸ் !

  ReplyDelete