19.11.11

எஃப் டிவி ஒளிரும் கார்காலம்மெத்தென்ற இருக்கையில்
ஒய்யாரமாய்க் கிடந்து
பளிங்குக்கல் தரையில்
ஒருக்களித்துப் படுத்து
ஒன்றிற்கு மூன்றுமுறை
கோணங்கள் மாற்றிக் குனிந்து
கிறக்கம் கிளர்த்தும்
எஃப் டிவியின்
முக்கால் நிர்வாண வானத்தின்
மேகங்கள் மீது வெட்டுகின்றன
காமிரா மின்னல்கள்
 
இடியோசையை
இதயத்துடிப்பில் வைத்திருப்பவனிடமிருந்து
எந்த நிமிடமும் பொழியலாம்
கனமழை.

- நன்றி உயிரோசை (உயிர்மை.காம்) 14.11.2011 இதழ்

1 comment:

  1. வாழ்வின் கனமழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது

    ReplyDelete