14.1.12

முதலில் ஏற்றிய அகல்


தீர்மானங்கள் 
நொடிக்கு நொடி தடுமாறும் தறுவாய்
முன் நீண்டு முன் நீண்டு
தயங்கி
பின்னுக்கு இழுபடுகிறது
காயு குட்டியின் சுட்டு விரல்

எதுவாயிருக்கும்
ஐந்தாறிலும்
முதலில் ஏற்றிய அகல்!

சுடர்களெல்லாம் பற்களாகி
ஒளிர்கிறது சிரிப்பு

1 comment:

  1. அழகிய காட்சி பதிவாய் இந்தக் கவிதை மிளிர்கிறது
    முன் நீண்டு முன் நீண்டு pinnukku என இருப்பதால் தயங்கி என்ற சொல் தேவையா என தோன்றுகிறது தோழர், வாழ்த்துக்கள்

    ReplyDelete