4.11.13

பள்ளிப் பருவத்துப் பட்டாம்பூச்சி
பதினெட்டாம் பக்கத்துக்கும்
பத்தொன்பதாம் பக்கத்துமிடையில்
சிறைபட்டிருந்தது
இத்தனை நாளும்
யதேச்சையாய் விரிக்கப்பட்ட
பழைய பாடப் புத்தகத்திலிருந்து
விடுபட்டு
காற்றில் அலைகிறது

தலைக்குத் தடவிய
எண்ணையை
காகிதத்தில் தோய்த்து
நகலெடுத்து வரைந்த
பள்ளிப் பருவத்துப் பட்டாம்பூச்சி.No comments:

Post a Comment