17.2.14

மஞ்சள் ரோஜா


1)
ஒளிவட்டத்துக்குப்
பின்னிருந்து ஒளிர்கிறது
உன் இருள்வட்டம்
மகிமை வாய்ந்தது
இப்படித்தான் போல
மஞ்சள் ரோஜா.

2)
கதிர்களை
இதழ்களென சுருக்கிக்கொண்டபின்
உக்கிரமில்லை
இந்தச் சூரியனிடம்
பிறகெங்கனம்
நிலவை நாடும்
உன் இரவு வானம்?!


1 comment:

  1. இரண்டுமே அருமை.... பாராட்டுகள்.

    ReplyDelete