23.2.14

உன் - என்


1)
பூனைப்பாதம் வைத்துத்தானுன்
ப்ரவேசம்

என்றாலுமே
என்னில்
அமைதி குலையவில்லை என
சொல்லவும் கூடுமா?

2)
சுரந்து உன்
நினைவுகளே பின்னும்
வலை எனத் தெரிந்தும்
சிக்குண்டிருப்பதில்
சுகித்திருக்கவே தலைப்படும்
பூச்சிதான்
என் இந்த மனம்.

2 comments:

  1. சுகித்திருக்கும் மனதிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இரண்டுமே அருமை! முதலாவது இன்னும் அருமை!
    kbjana.blogspot.com

    ReplyDelete