12.4.14

தற்காலிமாக - வேல்கண்ணன்

நேற்றைய பொழுதில்
சந்தித்து கொண்டோம் எதிரெதிர் திசைகளில்.
புன்னைகைத்தோம் கைக்குலுக்கினோம்.
உன்பார்வை போல் என் பார்வையும்
வானம் தாண்டி கிடந்தது.
நம் முகத்தில்சுண்ணாம்பு கலவை
அப்பிக்கிடந்தது. 
நம் சொற்கள் நலம் தாண்டி செல்லவேயில்லை
சில வேளைகளில் சொற்கள் நிறம் மாறுவதில்லை.
கண்முன்னே இனம் அழிவதயையும் கண்டுகொள்ளாத
நமக்கு
அந்த கணத்தில் சுற்றி நடப்பவைகளில்தான்
எவ்வளவு கவனம்.
விடை பெறுவதற்கான அவசரமும்
நெரிசலும் நமக்கு பக்கத்திலேயே கிடந்தன. 
விடைபெற்றோம் அவரவருக்கான திசைகளில். 
வரும் நாட்களில் சந்திக்க நேருமானால்
என் முகத்தை பிட்டத்திலும்
உன் முகத்தை தோள்பட்டையிலும்
வைத்து கொள்வோம்
நமக்கிடையேயான
அந்தகணத்தில் நிகழும்  
துரோக நடனத்தின்
அரங்கேற்றத்தை ஒத்திவைப்போம்
தற்காலிகமாவது.
 
 

No comments:

Post a Comment