7.6.14

அப்பாஸ் கவிதை

துப்பாக்கி


துப்பாகி என்றால்
என் மகள் கேட்கிறாள்
சுடுவதற்கு
யாரை
விரோதிகளை
விரோதிகளை என்றால்
உனக்கு பிடிக்காதவற்றைச் செய்பவர்களை
அப்படியென்றால்
எல்லோரையுமா
நானுமா
இல்லை
தேசத்தை அபகரிப்பவர்களை
தேசம் என்றால்
அபகரிப்பவர்கள் என்றால்
திருடர்களை
திருடர்கள் என்றால்
உனது பொருளை
உன் அனுமதியின்றி
எடுத்துச் செல்பவரை
அனுமதி என்றால்
சுதந்திரம்
ஓ அதுதான் துப்பாக்கியா.

- (ஆறாவது பகல் தொகுப்பில்)

1 comment: