30.6.14

கொல்லப்பட்ட நதி


1)

ற்றையடிப் பாதையை
அன்றைக்கு
சாவதானமாய்க் கடந்த
அதே
கருத்த நதி

இன்றைக்கு
விரைந்து விலகுகிறது
என் அரவம் கேட்டு

சருகுகள் கலைய
சலசலத்து.

2)

தலையைச் சிதைத்து
கொல்லப்பட்ட நதியை
வாலைப்பிடித்து
வலம் வருகிறான்
சிறுவன்

அப்போதோ
அது அருவியாய்ப்
பொழிகிறது.

3)

பின்னிப் பிணைந்து
நின்றாடும்
சிறு நதிகள் இரண்டைக்
கண்டேன்

இரண்டற கலவாமலே
விலகிப்போன
நதிகளை கண்டுகொண்டேன்


No comments:

Post a Comment