9.9.15

நண்டுகளில் அலைவுறும் சிசுவின் பாதங்கள்உறைந்த இருளென
நீலக்கடற்
கரைகொண்டிருக்கும் பாறை.

பிரித்தறியவியலா
அவயமே போல்
அதன்
வண்ணத்திலேயேயிருந்து
பற்றி நிற்கும்
ஒன்றிரண்டு நண்டுகள்.

அளவில்
பெரியதும் சிறியதுமான அலைகள்
மோதி மோதி
நுரைக்கக் கழுவியும்
வெளுத்திடாத நண்டுகள்
பெயர்வது அவ்வப்போது,

உள்ளிருந்து அலைவுறும்
கர்ப்ப கால சிசுவின்
பாதங்களைப் போல

மற்றும்

பாறை வயிறு
அங்கங்கே புடைக்கும்படியாக.

-  நன்றி: ’படிகம்’ கவிதைகள் இதழ்

1 comment:

  1. மோதி மோதி
    நுரைக்கக் கழுவியும்
    வெளுத்திடாத நண்டுகள்//
    பளிரிடும் வரிகள்!

    ReplyDelete