12.10.11

ஆறு கவிதைகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி
1)
பின் மண்டையில் அழுத்தி
சுடப்பட்டவன் நெற்றியை
துளைத்துக்கொண்டு
வெளியேறுகிறது குண்டு

முன்னதாக
தெறித்து விழுந்தது
நெற்றிக்கண்

2)
புதிதாய்
நான் வாங்கியிருக்கும்
கைத்துப்பாக்கியில் சுட்டுப்பழக
ஆட்கள் தேவை

3)
தற்கொலை செய்துகொள்ளப்போவதாக
மிரட்டி நிற்கும்
அவனின் விரல்
எப்போது சுண்டும் ட்ரிக்கர்-

துப்பாக்கியில் எழும்பும்
டுமீல் இசை
எனக்கு ரொம்ப பிடிக்கும்

4)
இறந்துபோனதென்று
தகவல் வந்தது,
பேட்டரி வாங்கிச்செல்லவேண்டும்
நிஷித்-தின் துப்பாக்கிக்கு

5)
அன்புள்ள திருடனுக்கு
என் தலையணையின் கீழ்
ஒரு பிஸ்டல்-ஐ வைத்துக்கொண்டே
உறங்குகிறேன்,
பின்னும்,
தூக்கத்தில் சுடும் நோயும்
எனக்குண்டு

6)
அரிசியில் போலவே
எழுதப்பட்டிருக்கலாம்
துப்பாக்கியின் ஒவ்வொரு குண்டிலும்
நம் பெயர்களும்


4 comments:

 1. ஒவ்வொரு கவிதையும் டுமீல் ரசனை!
  மிகவும் ரசித்தது...

  அரிசியில் போலவே
  எழுதப்பட்டிருக்கலாம்
  துப்பாக்கியின் ஒவ்வொரு குண்டிலும்
  நம் பெயர்களும்

  புதிதாய்
  நான் வாங்கியிருக்கும்
  கைத்துப்பாக்கியில் சுட்டுப்பழக
  ஆட்கள் தேவை

  ReplyDelete
 2. ஒன்றும் ஆறும் கவிதை- என்னைக் கவர்ந்த கவிதைகள்.

  ReplyDelete
 3. புதிய கோணங்களில் பயணிக்கும் எல்லாவற்றிலும்

  //அரிசியில் போலவே
  எழுதப்பட்டிருக்கலாம்
  துப்பாக்கியின் ஒவ்வொரு குண்டிலும்
  நம் பெயர்களும்//

  மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது தியாகு.

  இன்றின் ப்ரதிபலிப்பாய் இக்கவிதைகளை நான் எடுத்துக்கொண்டாலும் ஒரு தீபாவளித் துப்பாக்கியால் ஒரு குழந்தை எழுதிய கவிதைகளாகப் பார்க்கத் துடிக்கிறது தியாகுவை அறிந்த மனது.

  ReplyDelete
 4. ஆறாம் கவிதை பயமுறுத்தும் ரசனை!
  -வைகறை.

  ReplyDelete