17.10.11

தற்கொலையை விவரித்தல்உடைந்து
சிதறி
தெறித்து
சரிந்து
கலந்து
தத்தளித்து
துடிதுடித்து
கொப்பளித்து
குமிழியிட்டு
மூச்சுத்திணறி
மெதுமெதுவாய் அடங்கி
மீட்டுருக்கொண்டு
மிதக்கிறது கிணற்றில்
அம்புலியின்
மரணத்தின் கறை படிந்த
ஒரு பிரதிபிம்பம்.

2 comments:

  1. காட்சி கண்ணில் விரிகிறது..

    ReplyDelete
  2. தற்கொலையின் விவரிப்பு ஒரு கவிதையாய்ப் பிறக்கும் வினோதம் இப்படிச் சில அபூர்வமான தருணங்களில் மட்டும்தான்.அபாரமான செறிவான வார்த்தைகள் சாகவைக்கிறது பொறாமையால்.

    ReplyDelete