6.11.11

சஞ்சாரம்



காணவில்லை என்பதற்கும்
கண்டுபிடித்துத்தர
உருகியுருகி கேட்டுக்கொண்டதற்குமிடையில்
வெகு இயல்பாய்
குறுநகைத்தவாறிருக்கிறான்
மார்பளவு நிழற்படத்தில் அவன்


சடை விழத்துவங்கிவிட்ட
தலையோடும்
அதீதமாயொளிரும் கண்களோடும்
பின்னும்
பிறந்த மேனியோடும்
அதே நகரத்தின்
தெருக்களில் திரிந்தாலும்


வேறெவரும் கண்டறியாதபடிக்கு
அவன் சஞ்சரிப்பது
தம்மை கண்டடைந்தவர்களின்
உலகிலாயிருக்கலாம்

-
நன்றி சௌந்தர சுகன்

1 comment:

  1. வேறெவரும் கண்டறியாதபடிக்கு
    அவன் சஞ்சரிப்பது
    தம்மை கண்டடைந்தவர்களின்
    உலகிலாயிருக்கலாம்

    ஒரு கவிதை எந்த விதமாய் வெளிப்பட்டு.. எப்படி ஒரு பாதிப்பு தரக் கூடும் என்பதற்கு அழகிய முன்னுதாரணம் இந்தக் கவிதை.

    ReplyDelete