26.1.12

போதி மரம் - வெய்யில் ஞானம்

 
1.
வெய்யில் சில்லிடல் தாளாது
மரத்தை போர்த்தியிருக்கிறேன்
இப்போது  பரவாயில்லை
கதகதப்பாயிருக்கிறது

2.
சூரியனுக்கு
விரித்த வலை
சிக்கிய
கொஞ்சம் நட்சத்ரங்கள்தான் சேகரம்
மரத்தடியில்.

3.
வெய்யில் தாரைகளில்
ஈரலித்துவிடாதிருக்க
மரத்தடியடைந்தால்,
தரையெங்கும்
சொட்ட விட்டிருக்கும் இதுவோ
ஓட்டைப்பந்தல்

4.
க்கம் என்பதென்ன
சிறு மரணம்

யாத்ரீகன்
ஒருக்களித்துக்கிடக்கிறான்
அரசமர மேடையில்
வெளிச்சத்தோட்டாக்கள்
தேகமெங்கும் துளைத்திருக்க.

5.
மரத்துக்கு மேலே
அண்ணாந்தும்
தேவதைகளும் தட்டுப்படவில்லை

எங்கிருந்து பாய்ச்சுகிறார்கள்
இத்தனை
டார்ச் லைட்களை

6.
சூரியனைத்தான்
மரம் படித்தது
எடுத்துக்கொண்டது
சாரத்தை மட்டும்

7.
கூசாமல் பார்க்கலாம்
சென்ஸார் முடிந்தபின்னானதுதான்
இந்த காட்சி.                                                            

7 comments:

  1. //வெளிச்ச‌த் தோட்டாக்க‌ள்
    தேக‌மெங்கும் துளைத்திருக்க‌//

    க‌வித்துவ‌ம் க‌சிந்து ப‌ர‌வுகிற‌து தோழ‌ர்!

    ReplyDelete
  2. சூரியனைத்தான்
    மரம் படித்தது
    எடுத்துக்கொண்டது
    சாரத்தை மட்டும்

    எடுத்துக் கொண்ட சாரம் கவிதைகள் எங்கும்.

    ReplyDelete
  3. கூசாமல் படித்தேன்.கண்ணில் சூரியன் !

    ReplyDelete
  4. எல்லா கோணங்களின் மீதான உங்கள் கோணம்
    'வெயிலை'
    கிரந்கடித்துவிட்டது போங்கள்.

    ReplyDelete
  5. எனக்கு ஏழு சூரியன் தெரிகிறது

    ReplyDelete
  6. மாத்தி யோசிச்..சு
    ம‌ன‌சையே க‌வுத்திட்டிங்க‌.
    ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  7. எறும்பு பகிரும் வெல்லக்கட்டி

    தீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.
    சிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,
    கவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக்
    குடைகிறது .!
    நாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி
    அடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..!
    அம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும்
    பதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம்
    பதட்டம்...
    பிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு
    தவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும்
    வாய்ப்பையும் தந்தது.
    பிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்
    விருதினைப் பெற்ற மகிழ்வோடு வழங்கி மகிழ்கிறேன்
    பாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -
    எலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா?...
    இருக்கட்டுமே....வலைப்பூவின் உறுப்பினர் எண்ணிக்கையால்
    எலிக்கு யோகம்..!
    சுந்தர்ஜி -பரிவின் இசை
    இவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...
    ஹ ர ணி -ஹரணிபக்கங்கள்
    கையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்
    என்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்!
    இவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ ? என அன்றாடம் மணி
    அடிக்கிறது!

    ப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை
    என் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்
    என்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது

    குமரி.எஸ்.நீலகண்டன்-நீலகண்டனின் எழுத்துக்கள்
    என் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர
    எழுத்தினைப் பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...
    நிலாக்கவிதைகளின் ரசிகையானேன் ...


    அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
    எறும்பு குழந்தைகளுக்குப் பங்கிட்டது..
    குழந்தைகள் சுவைப்பார்கள்....
    அம்மாவும் கூட
    காத்திருக்கிறது சிற்றெறும்பு.... ..

    ReplyDelete