25.5.12

தாக்கவெனகை கொள்ளுமளவு கற்கள்
தாக்கவென
ஒரு கல்லை மறு கையிலேந்தி
கண் சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்

ஒரேயொரு பாறை
ஓணானின் வசம்

நான்கு காலிலும்
பற்றித்தூக்கி
அவனை நோக்கி
எப்படி எறியப்போகிறதென்றுதான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.No comments:

Post a Comment