4.5.12

உமிழ்நீர்சரித்துக்கொண்ட கொஞ்சம் உப்போடு
சரிவிகிதமாய்ச்சேர்க்கிறாள்
மிளகாய்த்துகள்களையும்

கொஞ்சமும் கொள்ளையாய்த்தெரிய
தன் குட்டியூண்டு உள்ளங்கையில் ஏந்தி
அதில்
தோய்த்தெடுத்துத்தின்கிறாள்
குவியல் சிறியதின் முதல் நெல்லிக்காயை

பிறகான அவளின்
முகக்கோணல்களைத்தொடர்ந்து
மேகங்கள் திரண்டு
உமிழ்நீர் சுரந்து வருகிறது
ஆகாசத்துக்கு.1 comment:

 1. முகக்கோணல்களைத்தொடர்ந்து
  மேகங்கள் திரண்டு
  உமிழ்நீர் சுரந்து வருகிறது
  ஆகாசத்துக்கு

  sabash

  ReplyDelete