29.9.14ள்ளுவண்டியின் குவியலிலிருந்து
நழுவிச் சரிந்ததொரு பழம்
உருண்டோடுகிறது சாலையில்

கண்டதில் விலகியவை
காணாதபோதும்
மோதாமல் கொள்ளாமலே
கடந்தவை என
சக்கரங்களால்
நேர்ந்துவிடவில்லை சேதம்
எனினும்
பூட்ஸ் ஒன்றன்கீழ் ரசஞ்சிந்த
நசுங்கும்படியானது அது


அடிபட்டுச் சாகிற அபாயமிருந்தும்
போக்குவரத்தினூடே
தாவி விழுந்து
வாரியெடுத்து
வாய் வைக்கிறான்
ஸ்கூட்டிகளில் கடக்கும்
சுடிதார் மூடிய ஏவாள்களின்
கள்ளப் பார்வைகள் தழுவ
தானறியாமலே தன்னை
ஒப்புக்கொடுத்திருக்கிற ஆதாம்

இப்போதோ
விலக்கப்பட்ட அக்கனியை
புசித்திட

அவன்
கண் திறப்பதிலும்
நிர்வாணம் மறைப்பதிலும்
உமக்குச்
சினமுண்டாகாதிருப்பதாக தேவனே.

No comments:

Post a Comment