28.12.11

உடன் வரும் மரங்கள் - 1தள்ளு வண்டியோடு நகர்கிறது
சாலையின் மருங்கில்
போன்ஸாய் மரங்களடர்ந்த
ஒரு குறும் வனம்

வார்த்தைகளில்
சுள்ளி சேகரித்து
கூடு கட்டுகிறது,

பேருந்தின் சன்னலினூடே
கண்ணுறுகையில்
அம்மரங்கள்
ஒத்த திசையில் உடன் வருவதை
குறித்துக்கொண்டுவிட்ட மனப்பறவை
இக்கவிதையை

2 comments:

 1. மனப்பறவை கட்டிய கூடு..
  வார்த்தைகளில்
  சுள்ளி சேகரித்து
  கூடு கட்டுகிறது..

  அழகு!

  ReplyDelete
 2. ஒத்த திசையில் ஒத்திசைத்துப் பறக்கிறது என் மனப்பறவையும் முன் மனப்பறவையைத் தொடர்ந்து. பிரமாதம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete