
1)
ஒரு மழை நாளில்தான்
நேருக்கு நேர் பார்த்துக்கொண்டோம்
இரண்டே கண்களால் நானும்
மயிலிறகுகளின்
ஆயிரம் கண்களும்
2)
புத்தகத்தில்
பதுக்கியிருப்பதையும் சேர்த்து
ரெட்டை ஜடைக்காரிக்கு
மொத்தம்
மூன்று கண்கள்
3)
கூசவுமில்லை
நிலைகுத்தி நிற்கின்றன
வயல்வெளியோடு சிதறிக்கிடக்கும்
கண்கள் சிலவற்றின் பார்வைகள்
சூரியனில்
4)
மயிலிறகின் கண்ணுக்காயும்
சிமிட்டுவாய்
என்னிமையே
5)
பேகன் தோன்றிய
- மயிலின் - நூற்றுக்கண்களில்
ஒன்றில்தான் இப்போது
நானும் தோன்றுகிறேனென்றால்
அது மிகையாகாது
- நன்றி: ரமேஷ்-பிரேம்-ன் கவிதைக்கு
ஒரு மழை நாளில்தான்
ReplyDeleteநேருக்கு நேர் பார்த்துக்கொண்டோம்
இரண்டே கண்களால் நானும்
மயிலிறகுகளின்
ஆயிரம் கண்களும்
புத்தகத்தில்
பதுக்கியிருப்பதையும் சேர்த்து
ரெட்டை ஜடைக்காரிக்கு
மொத்தம்
மூன்று கண்கள்//
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!
பேகன் தோன்றிய
- மயிலின் - நூற்றுக்கண்களில்
ஒன்றில்தான் இப்போது
நானும் தோன்றுகிறேனென்றால்
அது மிகையாகாது//
மயிலின் சாயல் கொண்டவளிடம் மையல் கொள்ள மட்டுமல்ல பேகனாய் மாறி மனமிரங்கவும் முடிகிற ரசவாதம்.
புத்தகத்தில்
ReplyDeleteபதுக்கியிருப்பதையும் சேர்த்து
ரெட்டை ஜடைக்காரிக்கு
மொத்தம்
மூன்று கண்கள்
கண் சிமிட்டாமல் படிக்கிறேன்..