13.2.12

அழைப்பு:

 

இணைய தளத்தில் இலக்கியத்துக்கான இணைய இதழ்கள் மற்றும் படைப்பாளிகளே நிறுவிக்கொள்ளும் வலைப்பூக்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிற இந்நாட்களில் அச்சு இதழ், குறிப்பாக, சிற்றிதழ் நடத்துவதென்பது ஒரு இதழாசிரியர் எதிரேயிருக்கிற மிகப்பெரிய சவால்தான். என்றாலும், சிற்றிதழ்களுக்கான மதிப்பு, தேவை என்பவை இல்லாமலுமில்லை.
அந்தவகையில், நண்பர் இயற்கைசிவம் அவர்கள், தான் ஆசிரியராயிருந்து ஆரம்பிக்கவிருக்கும் இலக்கியச்சிற்றிதழ் வெயில்நதி வருகிற 'மே' மாதம் முதல் (இரு மாதத்துக்கு ஒருமுறை) வெளிவரவிருக்கிறது.
நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள் கதைகள், படைப்பாளுமைகளின் நேர்காணல்கள் என உங்களின் வாசிப்பனுபவத்தை மேலும் சிலிர்க்கச் செய்வதான இந்த முயற்ச்சியில், படைப்புகள், சந்தாக்கள், தோழமைகள் சகிதம் பங்கேற்று வெயில்நதி-யை சிறந்த இலக்கியச்சிற்றிதழாக்க அன்போடு அழைக்கிறோம்!
இரு திங்கள் தனிச்சுற்று இதழாக, ரூபாய் 15 /-
ஆண்டு சந்தா ரூபாய் 90/-
இரு ஆண்டுகள் சந்தா ரூபாய் 170/-
அனைத்து தொடர்புகளுக்கும்:
இயற்கைசிவம் - ஆசிரியர், வெயில்நதி. 
எண் :- 1 டி, சந்தை மேடு, சிருகடம்பூர், செஞ்சி - 604202,
விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா.
கைப்பேசி எண்கள் : 99411 16068 , 89409 62277,
மின்னஞ்சல் முகவரி : veyilnathi@gmail.com
(படைப்புகளை அஞ்சல் மற்றும் மின்னஞ்சலிலும், சந்தாவை MO மூலம் மேற்கண்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்)

No comments:

Post a Comment