28.2.12

ஒப்பற்ற ஓவியமாகுபவன்கவிந்து
திறந்து இயங்கும்
இரண்டு இமைத்தூரிகைகள்
தீட்டுகின்றன அவனை

அனுதினம்
பார்வைகளில் பெருகும்
வண்ணங்கள்
ஹேர் ஜெல் ஆகி
அவன் கேசத்தைத்தடவுகிறது
ஃபேர் அண்டு ஹேண்ட்சம் ஆகி
அவன் கன்னக்கதுப்புகள் உட்பட
வருடுகிறது
நிறம் நிறமாய்
டி ஷர்ட், காட்டன் பேன்ட்கள்
அவனுடலைத்தழுவுகின்றன

ரெண்டு கை, கால்கள்
ஒரு முகம்
இன்னபிறவாக
சராசரி சதைப்பற்றாயிருந்தவன்
ஆகிக்கொண்டிருக்கிறான்
அவள்வரையில்
ஒப்பற்ற ஓவியமொன்றாக.

3 comments:

 1. நல்ல காஸ்மெடிக் கவிதை தியாகு.

  ReplyDelete
 2. ஆங்கிலக் கலப்பின்றி அழக தமிழில் எழுதினால் நன்றாயிருக்குமே..பார்த்தீர்களா..பின்னூட்டமிடுவரும் தன் பங்குங்கு ஆங்கிலத்தை எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் வழிகாட்டிகளாய் இருப்போமே.
  சமூக பொறுப்புடன். அன்பான கோரிக்கை இது.

  ReplyDelete
  Replies
  1. தோழி,

   பத்தில் ஒரு கவிதையை இப்படி ஆங்கில கலப்பில் எழுதிட மனம் ஆர்வம் காட்டுவதுண்டு. உங்கள் அன்பான கோரிக்கையையேற்று மாற்றிக்கொள்ள முயல்வேன்.

   விசைப்பலகையில் தட்டச்சு மேற்கொண்டிருக்கையில் நீங்களும் சற்று கவனமாயிருந்திருந்தால் இப்படி ஒரு நல்ல வார்த்தை (அழக) அழகிழந்திருக்காதல்லவா!

   அன்பு நன்றியுடன்

   Delete