18.2.12

தோற்றப்பிழைஎன் கால்களையே
சுற்றிச்சுற்றி வருகிறது
நாய்க்குட்டி போல
கடல்
கரையை தாண்டிவிட்டவன்
திரும்பிப்பார்க்கிறேன்
காதுகள் விடைத்து
கால்களால் தாவித்தாவி
என்னுடன்
வர யத்தனிக்கிறது
அக்கரையில்
கட்டிவைக்கப்பட்டிருக்குமிந்த
நாய்க்குட்டி

1 comment:

  1. கடலையே நாய்க்குட்டியாய் உருவகித்தக் கவிதையைப் படித்தபின் அட, ஆமாம் என்று புதுக்கோணத்தில் ரசிக்கத்தோன்றுகிறது. பாராட்டுகள்.

    ReplyDelete