4.3.12

விடுபடலின் மந்திரம்
அவரின் சுபாவத்தின் பட்டறையில்
எனக்கென்றே தயாரானது
பொன் போன்றதான
எனது காலத்தின் குரல்வளையை
கருணையேயின்றி
அலைந்தறுக்கும் இவ்வாள்

உதிரம் பெருகி
இன்னும்
முக்கால் அங்குலம்
அறுபடவிருந்த நிலையில்
உச்சரிக்கிறார்
உதிரம் நாளங்களுக்கே
திரும்பவும்
அறுபட்டதன்
சுவடேதும் தெரியாமல்
குரல்வளை சேரவுமான
அம்மந்திரத்தை
"அப்போ நான் புறப்படட்டுமா நண்பரே!"

சுவாசிக்கக்கூடிவிட்ட நிலையில்
முணுமுணுக்கிறேன்
அவருக்குக்கேட்காமல்
"ரொம்ப நல்லது!"

உரக்கவே சொல்கிறான்
அருகேயிருந்த நிஷித்
"நல்ல ரொம்பது!"

- குட்டி, T.நிஷித்-க்கு

2 comments:

  1. ஏ அப்பா! இந்தத் தியாகு கிட்ட பேசலாமாங்ணா கேட்டுக்கிட்டுத்தான் பேசணுங்!

    நல்ல ரொம்பதுங்!

    ReplyDelete
  2. நல்ல ரொம்பதுங்!

    ReplyDelete