17.3.12

அந்த ஈஆவி சிறகடித்து எழும்ப
ஆவி சிறகடித்துப்பறக்க
ஆவி சிறகு நிறுத்தி மிதக்க
ஆவி சிறுகச்சிறுக காற்றில் மறைய
இன்னும் அருந்தப்படாதிருக்கிறது
கோப்பையில் தேனீர்
இன்னொரு முறை அந்த ஈ
வந்து திரும்புமெனில்
அது எட்டாவது தடவை

No comments:

Post a Comment