22.3.12

பாவனைகள்


 மேகத்தை வழிநடத்தக் கேட்டுக்கொண்டாலும்
இப்படித்தான் இருக்கும் போல
இந்த வழிநடத்துபவன் கைக்கொள்ளும்
பாவனைகள்

மெல்லியதும் நீண்டதுமான
குச்சி கொண்டு,
மூட்டத்திற்கு நோகாமல்
இடவலமாய் அணைத்திடவும்
சீர் பிசகாமல் செலுத்தவும்
தேர்ந்தவன் இவன்

அப்போது
மேகம் பெயர்வதானது
நம்மில் ரம்மியம் கூட்டவிருக்கிறது
பெயருமிந்த
வாத்துக்குஞ்சுக் கூட்டம் போலவே.

நன்றி: இந்த வார (28.03.12)

3 comments:

 1. பெயருமிந்த
  வாத்துக்குஞ்சுக் கூட்டம் போலவே.

  ஸிம்பனி இசை கேட்ட திருப்தி.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் தியாகு.

  ஒரு ரயில் பயணத்தில் ஓசி ஆனந்த விகடன் சொவனத்தில் கண்பதித்த போது நேர்ந்தது இக்கவிதையை வாசிப்பது.

  பாவனைகள் தனித்துத் தெரிந்தது அதன் மொழி லாவகத்தால்.

  தொடரட்டும் இது போன்ற காலம்.

  ReplyDelete
 3. மேகத்தோடு பயணித்து பஞ்சுப்பொதியாய் அலைய வாய்க்கிறது
  இந்த வாத்துக்குஞ்சுகளை வாசிக்கும்போது....
  வாழ்த்துக்கள் !

  ReplyDelete