18.5.13

பவித்ரன் தீக்குன்னியின் ஒரு கவிதை


பிறகு?

நீயும் குழந்தைகளும்
என்றென்றைக்கும்
என்னுடையவர்கள் மட்டும்தானென்று
நான் நம்பவில்லை
இது போன்ற துர்விதி என்னை
வேட்டையாடுமென்றால்
நாளை உங்களை ரட்சிப்பதற்கான
எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும்
பட்சத்தில்
உனக்கு விருப்பமில்லை என்றாலும்
உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு
தேடிச் செல்லும்
அவன் பரிசாய் தருகின்ற
இனிப்பு பலகாரங்களிலும்
விளையாட்டு சாதனங்களிலும்
நமது குழந்தைகள் சந்தோசத்தில்
மூழ்கிப்போவார்கள்
பிறகு பிறகு
அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின்
வெள்ளரித் தோட்டத்தில்
நான் வெறும் சோளக்கொல்லை
பொம்மைதான்.

1 comment:

  1. வெள்ளரித் தோட்டத்தில்
    நான் வெறும் சோளக்கொல்லை
    பொம்மைதான்.//

    உவமையின் வீர்யம் சொல்ல வருவதை முகத்தில் அறைந்து சொல்கிறது.

    ReplyDelete