25.6.13

மூன்று கவிதைகள்




1)
இத்திசை பார்த்து
அசையும் உன்
விரிந்த கை
சூரியகாந்தி

என் பார்வையிலிருந்தும் அறுபட
திருப்பத்தில் மறைந்துவிடுகிறது
பேருந்து

இப்போது
பூ துவண்டுவிட்டிருக்கும்
என்பது மட்டுமில்லை
நானும் சூரியனில்லை.

2)
நடுவிலிருந்து பிரிக்கலாம்
ஒரு வேலி
அது
கொண்டாட்டம்தான்
நம் கொடிகளுக்கு.

3)
கிளை கைவிட்ட
பழுத்த இலை
சரிந்து
தலை சாய்க்கிறது,
விதித்ததனிமித்தம்
இதுகாறும்
எட்ட இருந்த
தன் நிழலின் மடியில்.

1 comment:

  1. வண்ணமய கவிதை ..! வாழ்த்துகள்..!

    ReplyDelete