20.9.13

ஜி.எஸ்.தயாளன் கவிதை

அழியும் ரப்பர்

 

இந்த ரப்பர் யார் தந்தது ஞாபகமிருக்காப்பா
எதையோ அழிக்கும் போது சஹானா கேட்டாள்
யோசித்து ‘இல்லை’ என்றேன்
ஆன்டனி மாமா தந்தது என்றாள்
பலத்த அதிர்வுடன் ஒரு மின்னல் கோடு கிழித்து மறைந்தது
நண்பன் ஆன்டனி இறந்து ஒராண்டு
இருபத்தைந்து ஆண்டுகள்
நினைவுகளைப் பின்னோக்குகிறது.

மரத்தை கொண்டிருக்கும் சிறு விதை போல்
எத்தனை பெரிய காலம்
ஒரு ரப்பரில்
ஒரு சொல்லில்

திரும்பவும் சஹானா அழிக்கிறாள்
எழுத்துக்களை
காலத்தை
ரப்பரை

- ஜி.எஸ்.தயாளன்
(சிலேட் - 2013 இதழில்)



2 comments:

  1. சஹானா
    அந்த ரப்பரைத் தந்தது
    ஆண்டனி மாமா என்று சொன்னபோது,

    கையில் இருந்த ரப்பர்
    ‘இல்லை’ என முணுமுணுத்தது
    தன்னைத் தந்த மரத்தை எண்ணி.

    பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவையாகவே இருக்கின்றன நம் கோணங்கள்.

    ReplyDelete